(*)அச்சுத் தாயின் முதற் குழந்தை இந்தச் செய்தித்தாள். (*) ஒரு கையில் தேநீர், மறு கையில் செய்தி.. இரண்டுமே சுடச் சுட இருப்பது தான் அதிகாலை ஆனந்தம். (*) ஒரே நாளில் உயர்விழந்துப் போகும் இவை நிரந்தரமின்மையின் நிதர்சனம். (*)செய்தித்தாள்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை, செய்திகளிலிருக்கும் எழுத்துக்களின் எண்ணிக்கையை ஒருவேளை ஒத்திருக்கக் கூடும். (*) பேருந்து, ரயில்களில் இரவல் வாங்கப்படும் பத்திரிகைகள் 'செய்திகள் எல்லோருக்கும் பொதுவானவை' என்பதை சூசகமாய்ச் சொல்லும். (*) செய்திகளுக்கு மட்டுமானதல்ல இந்தச் செய்தித்தாள்கள். இன்றைய செய்தித்தாள்கள் இனி நாளை முதல்.. (*) ஓர் ஏழை மாணவனின் புத்தக உறையாக.. தெருவோர தேநீர்க்கடையில் வடையிலிருந்து எண்ணெய் அகற்றும் வடியாக.. முன்பதிவில்லா புகைவண்டிப் பெட்டிகளில் விரித்து அமரும் பாயாக.. சில்லரை மளிகையில் சர்க்கரை மடிக்கும் சுருளாக.. (*) இன்னும் பலவாக.. இரண்டாம் முறையாய் பயன் தந்து மரித்து மக்கிப் போகும். --அதிரை என்.ஷஃபாத்
ஆறாம்நிலம்-க'விதை'யின் விளைநிலம்!!
தினசரிகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)